ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளை
என்னுள் விதைத்துவிட்டு
சென்றுவிட்டாய்!
என் கண்களில்
அவை விருட்சமாய்
வளர்ந்துகொண்டே இருக்கின்றன!
என் மனதிலுள்ள
உன் நினைவுகளை
அவை தழைக்கச் செய்கின்றன!
பெருமுயற்சிக்குப் பிறகு
காடுகளை பூந்தோட்டமாக்குகிறேன்!
உன் கண்ணீர் விதைகள்
மீண்டும் அவற்றை
காடுகளாகவே மாற்றிவிடுகின்றன!
நான் இன்னமும்
என்ன செய்வதென்று
தெரியாமல் ...!
No comments:
Post a Comment