நீ வந்துபோன
வாசத்தை வைத்திருந்த
நந்தவனம்!
நீ பேசிப்போன
வார்த்தைகளை
பதிந்து வைத்திருக்கும்
இசைத்தட்டு!
உன் ஆக்ரமிப்பை
அனுமதித்த
போர்க்களம்!
உன் குறும்புகளின்
அடையாளங்களை
தாங்கி நிற்கும்
அருங்காட்சியகம்!
உன் கண்ணீரையும்
என் கண்ணீரையும்
தாங்கிக்கொண்ட
தலையணை!
No comments:
Post a Comment